Benny Dayal Mahathi

"Unakkenna Venum Sollu"

UNAKKENNA VENUM SOLLU Lyrics by Benny Dayal Mahathi
உனக்கென்ன வேணும் சொல்லு
உலகத்தை காட்ட சொல்லு
புது இடம் புது மேகம் தேடி போவோமே
பிடித்ததை வாங்க சொல்லு
வெறுப்பதை நீங்க சொல்லு
புது வெள்ளம் புது ஆறு நீந்தி பார்ப்போமே

இருவருள் பகல் இரவு ஒரு வெயில் ஒரு நிலவு
தெரிந்தது தெரியாதது பார்க்க போறோமே

உலகம் என்னும் பரமபதம்
விழுந்தபின் உயர்வு வரும்

நினைத்தது நினையாதது சேர்க்க போறோமே

ஒரு வெள்ளி கொலுசு போல இந்த பூமி சிணுங்கும் கீழ
அணியாத வைரம் போல அந்த வானம் மினுங்கும் மேல

ஒரு வெள்ளி கொலுசு போல இந்த பூமி சிணுங்கும் கீழ
அணியாத வைரம் போல அந்த வானம் மினுங்கும் மேல

கனவுகள் தேய்ந்தா தென்று கலங்கிட கூட தென்று
தினம் தினம் இரவு வந்து தூங்க சொல்லியதே

எனக்கென உன்னை தந்து உனக்கிரு கண்ணை தந்து
அதன் வழி எனது கனா காண சொல்லியதே

நீ அடம் பிடித்தாலும் அடங்கி போகின்றேன்
உன் மடி மெத்தை மேல் மடங்கி கொள்கின்றேன்

தான நானா தான நாம் தம் தான
தாரா ந ந நாம் தம் தான நானா
தான நாம் தம் தான தாரா
ந ந நாம் தம்

உனக்கென்ன வேணும் சொல்லு
உலகத்தை கட்ட சொல்லு

புது இடம் புது மேகம் தேடி போவோமே
பிடித்ததை வாங்க சொல்லு

வெறுப்பதை நீங்க சொல்லு
புது வெள்ளாம் புது ஆறு நீந்தி பார்ப்போமே

பருவங்கள் மாறி வர வருடங்கள் ஓடி விட
இழந்த என் இனிமைகளை உன்னில் கண்டேனே

எழுதிடும் உன் விரலில் சிரித்திடும் உன் இதழில்
கடந்த என் கவிதைகளை கண்டு கொண்டேனே

துருவங்கள் போல் நீளும் இடைவெளி அன்று
ஓ ஒ தோள்களில் உன் மூச்சு இழைகிறதின்று
தான நானா தான நாம் தம்
தான தாரா ந ந நாம் தம்

தான நானா தான நாம் தம்
தான தாரா ந ந நாம் தம்

உனக்கென்ன வேணும் சொல்லு உலகத்தை கட்ட சொல்லு
புது இடம் புது மேகம் தேடி போவோமே

பிடித்ததை வாங்க சொல்லு வெறுப்பதை நீங்க சொல்லு
புது வெள்ளம் புது ஆறு நீந்தி பார்ப்போமே

இரவுகள் பகல் இரவு ஒரு வெயில் ஒரு நிலவு தெரிந்தது
தெரியாதது பார்க்கப் போறோமே

உலகம் என்னும் பரம பதம்
விழுந்த பின் உயர்வு வரும்
நினைத்தது நினையாதது சேர்க்கப் போறோமே

ஒரு வெள்ளி கொலுசு போல

இந்த பூமி சிணுங்கும் கீழ அணியாத வைரம் போல
அந்த வானம் மினுங்கும் மேல ஒரு வெள்ளி கொலுசு போல

இந்த பூமி சிணுங்கும் கீழ அணியாத வைரம் போல
அந்த வானம் மினுங்கும் மேல
  • 3709 Likes
  • 5486 Views
  • 551 Comments
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z